பக்கங்கள்

ஞாயிறு, 5 ஜூலை, 2020

கண்ணான கண்ணே | Kannana kanne lyrics



இப்பாடல் வரிகளை எழுதியவர் தாமரை, பாடலைப் பாடியவர் சித் ஸ்ரீராம், இசையமைத்தவர் டி.இமான், இப்படத்தின் பெயர் விசுவாசம்.



கண்ணான கண்ணே கண்ணான கண்ணே!!
என் மீது சாய வா!!
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்!!
பூ போல நீவ வா!!
நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும்!!
என் ஏக்கம் தீருமா!!
நான் பார்த்து நின்றேன் பொன் வானம் எங்கும்!!
என் மின்னல் தோன்றுமா!!
தண்ணீராய் மேகம் தூறும்!!
கண்ணீர் சேரும் கற்கண்டாய் மாறுமா!!
ஆராரி ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ!!
ஆராரி ராரோ ராரோ ராரோ  ஆராரி ராரோ!!
ஆராரி ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ!!
ஆராரி ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ!!

கண்ணான கண்ணே கண்ணான கண்ணே!!
என் மீது சாய வா!!
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்!!
பூ போல நீவ வா!!

அலை கடலின் நடுவே!!
அலைந்திட வா தனியே!!
படகென உன்னையே பார்த்தேன் கண்ணே!!
புதை மணலில் விழுந்தே புதைந்திடவே இருந்தேன்!!
குறுநகையை எறிந்தே  மீட்டாய் என்னை!!
விண்ணோடும் மண்ணோடும் ஆடும் பெரும் ஊஞ்சல்!!
மனதோரம் கண் பட்டு நூல் விட்டு போகும் என ஏதோ பயம் கூடும்!!
மயில் ஒன்றை பார்க்கிறேன் மழையாகி ஆடினேன்!!
இந்த உற்சாகம் போதும் சாக தோன்றும் இதே வினாடி!!
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே!!
என் மீது சாய வா!!
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்!!
பூ போல நீவ வா!!

நீ தூங்கும் போது முன் நெற்றியின்!!
மீது முத்தங்கள் வைக்கணும்!!
போர்வைகள் போர்த்தி போகாமல் தாழ்த்தி!!
நான் காவல் காக்கும்!!
எல்லோரும் தூங்கும் நேரம்!!
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்!!
ஆராரி ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ!!
ஆராரி ராரோ ராரோ ராரோ  ஆராரி ராரோ!!
ஆராரி ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ!!
ஆராரி ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ!!
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே!!

வாயாடி பெத்த புள்ள | Vayadi pethapulla lyrics


பாடல் வரிகளை எழுதியவர் ஜி கே பி, இப்பாடலைப் பாடியவர்கள் ஆராதனா சிவகார்த்திகேயன், வைக்கம் விஜயலட்சுமி, சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்.


வாயாடி பெத்த புள்ள வரப்போறா நெல்ல போல!!!
யார் இவ யார் இவ!!!
கையில சுத்துற காத்தாடி காத்துல ஆடுது கூத்தாடி!!!
கண்ணுல கலரா கண்ணாடி வம்புக்கு வந்து நிற்பா!!!
யாரு இவ யாரு இவ!!!

யார் இந்த தேவதை ஆனந்த பூமக வால் மட்டும் இல்லையே!!!
சேட்டை கெல்லாம் சொந்தக்காரி!!!
யார் இந்த தேவதை ஊர் கொஞ்சும்!!!
ஏமக நீ எந்தன் சாமிதான் என்னை பெத்த சின்னத்தாயே!!!

அன்னக்கிளியே வண்ணகுயிலே!!!
குட்டி குரும்பே கட்டிக்கரும்பே!!!
செல்லக்கிளியே சின்ன சிலையே!!!
அப்பன் மகளா பிறந்தவளா!!!

அப்பனுக்கு ஆஸ்தியும் நான் தானே!!!
ஆசையா வந்தே பொறந்தேனே!!!
வானத்தில் பட்டமாய் உசரக்க  பறந்தேனே!!!
எனக்கு இருக்கும் கனவு எல்லாமே!!!
நிலவு கிட்ட சொல்லி வைப்பேனே!!!
பாசத்தில் விளையுற வயல போல இருப்பேனே!!!
பட்டு புள்ள நெனப்புல!!!
பசி எனக்கில்லை இவள் சிரிப்புல மயிலே!!!
வானவில் குடைக்குள் மழை பஞ்சமில்ல!!!
இடி மின்னல் இவள் கூட பாட்டு கட்டி ஆடும்!!!
யார் இந்த தேவதை  தானனானா… தன்னானா,,,  
வால் மட்டும் இல்லையே!!!
ஆசை மக என்ன செஞ்சாலும்!!!
அதட்ட கூட ஆசை படமாட்டேன்!!!
என் மக ஆம்பள பத்துக்கு சமம் தானே!!!
செவுத்து மேல பந்த போல தான்!!!
சாணியையும் சுழட்டி அடிப்பாளே!!!
காளையை கூடவும் அண்ணனா நினைப்பாளே!!!
எப்பவுமே செல்ல புள்ள விளையாட்டு புள்ள!!!
ரெட்டைசுழி புள்ள அழகே!!!
பெத்தவங்க முகத்துல ஒரு சிரிப்புல ஆசை பொண்ணு!!!
ஆயுள் தானே கூடிக்கிட்டே போகும்!!!
வாயாடி பெத்த புள்ள வரப்போறா நெல்ல போல!!!
யார் இவ யார் இவ!!!
கையில சுத்துற காத்தாடி காத்துல ஆடுது கூத்தாடி!!!
கண்ணுல கலரா கண்ணாடி!!!
வம்புக்கு வந்து நிற்பா யாரு இவ யாரு இவ!!!
யார் இந்த தேவதை ஆனந்த பூமக வால் மட்டும் இல்லையே!!!
சேட்டை கெல்லாம் சொந்தக்காரி யார் இந்த தேவதை ஊர் கொஞ்சும்!!!
ஏமக நீ எந்தன் சாமிதான் என்னை பெத்த சின்னத்தாயே!!!

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை | Kannamma Kannamma lyrics


படத்தின் பெயர் ரெக்கை, பாடல் வரிகளை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார். இப்பாடலை டி.இமான் இசை அமைத்துள்ளார் மற்றும் நந்தினி ஸ்ரீகர் பாடியுள்ளார்.


கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை!!!
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை!!!
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை!!!
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை!!!
உன்னை நினைத்து இருந்தால் அம்மம்மா நெஞ்சமே!!!
துள்ளிக்குதித்து அதுதான் எங்கெங்கும் செல்லுமே!!!
ஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ!!!
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை!!!
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை!!!
செம்பருத்தி பூவை போல சினேகமான வாய்மொழி!!!
செல்லம் கொஞ்ச கோடை கூட ஆகிடாதோ மார்கழி!!!
பால் நிலா உன் கையிலே சோறாகி போகுதே!!!
வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே!!!
கண்ணம்மா கண்ணம்மா நில்லம்மா!!!
உன்னை உள்ளம் என்னுதம்மா!!!
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை!!!
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை!!!
உன்னுடைய கோலம் காண கோவில் நீங்கும் சாமியே!!!
மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே!!!
பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்!!!
தேவதை நீ தான் என வாயார போற்றுவான்!!!
கண்ணம்மா கண்ணம்மா என்னம்மா!!!
வெட்கம் வெட்டி தள்ளுதம்மா!!!
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை!!!
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை!!!